கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழக எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரம். கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஆலப்புழா மாவட்டத்தில் அதிகமானோர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் நுழையாதவாறு தடுக்கும் வண்ணம் நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லை சோதனை சாவடியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கக்கநல்லா சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி […]
சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மை காவலர்கள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் சிறிய மோட்டாா் பொருத்திய தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், ட்ரோன் கருவி மூலம் வானில் பறந்தபடியே ஆள்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. ட்ரோன் மூலம் […]