காந்தியத்தை இந்தியா முழுவதும் பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானி அவர்கள் 1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி வாழ்வில் ஒருமுறை அங்கு படிக்கும்போது, ‘இந்தியர்கள் பொய்யர்கள்” என்று கூறியதற்காக மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார் என்பது மறக்க முடியாத ஒன்று. பின், இவர் மகாத்மா காந்தியடிகள் நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராக பணியாற்றினார். இவர் வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார் என்பாது குறிப்பிடத்தக்கது. […]