Bitcoin : உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான (டிஜிட்டல் நாணயம்) பிட்காயின் மதிப்பு சர்வதேச சந்தையில் முதல் முறையாக 70,000 டாலரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பிட்காயினின் மதிப்பு 66,800 டாலராக இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. Read More – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.! புதிய அமெரிக்க ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கிரிப்டோ தயாரிப்புகளுக்கான முதலீட்டாளர்களின் தேவை […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு சந்தையில் 50,000 டாலராக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில், கிரிப்டோகரன்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பிட்காயின் என்ற மெய் நிகர் கரன்சி வெகுவாக கவர்ந்து வருகிறது. இது முற்றிலும் ஒரு மின்னணு முறையிலான பரிவர்த்தனையாகும். இதனால், இந்த காயினின் மார்க்கெட் மதிப்பும் வர வர உயர்ந்துகொண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு […]
மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸ், ஜூன் காலாண்டில் வருவாய் மற்றும் லாபம் இரண்டிலும் பெரும் இழப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு வருடத்திற்கு முந்தைய காலாண்டில் இருந்து வருவாய் $2.033 பில்லியனில் இருந்து $803 மில்லியனாகக் குறைந்ததால் $1.1 பில்லியன் நிகர இழப்பை பதிவு செய்து, Q2 இல் 60% வருவாய் குறைந்ததாக அறிக்கைகள் வெளியிட்டன. காலாண்டு அடிப்படையில், காயின்பேஸ் இன் நிகர வருவாய் Q1 உடன் ஒப்பிடும்போது 31 சதவீதம் குறைந்துள்ளது. Q2 ஒரு கடினமான காலாண்டாக […]
பெரும்பான்மையான ஆல்ட்காயின்கள் இழப்புகளைப் பதிவு செய்வதால் பிட்காயின் $23,000க்கு கீழே சரிந்தது. உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியான Bitcoin (BTC) கடந்த 24 மணிநேரத்தில் சிறிய சரிவைக் கண்டது. Ethereum (ETH), Dogecoin (DOGE), Solana (SOL) மற்றும் பல கிரிப்டோகரன்சிகள் 24 மணிநேரத்தில் இழப்புகளை எதிர்கொண்டன. மறுபுறம், அதிகம் அறியப்படாத ஆல்ட்காயின்களில், Chiliz (CHZ) டோக்கன் கடந்த 24 மணிநேரத்தில் அதிக லாபத்தை ஈட்டியது. நேற்று அதிக லாபம் ஈட்டிய Filecoin […]
ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் கிரிப்டோகாரன்சி செயல்பாடுகள், அதன் மீதான அதீத முதலீடுகள் சமீபத்திய வருடஙக்ளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிக்கு எந்தவித பாதுகாப்பு வரைமுறைகளும் இல்லாத காரணத்தால் அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க […]
உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது. இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் […]
சென்னை:கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நெல்லையை சேர்ந்த அய்யா என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்,கிரிப்டோகரன்சிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு,ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளன எனவும்,உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பட்டுள்ளார். மேலும்,அதிக வட்டி தருவதாக கூறி கேரளாவில் ரூ.100 கோடி […]
கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தியாவில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில், இன்று மாநிலங்களவையில் கிரிப்டோகரன்சி பற்றி கேள்வி எழுப்பியபோது புதிய மசோதாவை உருவாக்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் கிரிப்டோகரன்சி சந்தை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும். கிரிப்டோகரன்சி குறித்து முழுமையான விவாதம் நடத்தப்படும். கிரிப்டோகரன்சிகள் தவறானவர்களின் […]