சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.62,320-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.7,705-க்கும், சவரன் ரூ.61,640-க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு எதிரொலியால் விலை சரிவைக் கண்டுள்ளதாகவும், மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் […]