உத்தரபிரதேச மாநிலம் மீரட் டி.பி. நகரை சேர்ந்த விகாஸ்குமார். இவரது மனைவி அனு. விகாஸ் குமாரின் சகோதரிக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இதற்காக விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுவிடம் கிட்னியை தானமாக கொடுக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கு அனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் விகாஸ் குமார், அனுவின் பெற்றோருக்கு […]