பிரதமர் மோடி நேற்று ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டு ரூ. 32,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். அங்குள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற உரையாற்றிய பிரதமர், “கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் நடந்த ஜி20 நிகழ்வின் போது காஷ்மீரின் அழகு, பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அனைவரும் அந்த இடத்தைப் பார்வையிட விரும்புகிறார்கள். இப்போது அனைவரும் காஷ்மீருக்கு வர விரும்புகிறார்கள். மாதா […]
கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட […]
காஷ்மீர், ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் வருவதை ஒட்டி நேற்று காஷ்மீர் முழுக்க பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கட் செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
காஷ்மீர் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் அசாதாரண வேகத்தில் உருகுவதால் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. காடழிப்பு மற்றும் வனச் சிதைவு புவி வெப்பமடைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வட இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் பகுதி முழுவதும், அதிகரித்து வரும் வெப்பநிலையால், பனிப்பாறைகள் உருகுதல் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது. அதே நேரத்தில் அடிக்கடி மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளப்பெருக்கும் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, […]
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வன்முறைகளும்,தீவிரவாத நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில்,காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள்,30 மெகசின்கள்,300 தோட்டாக்கள் மற்றும் 1 சைலன்சர் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. J&K | Two local hybrid terrorists of proscribed terror outfit LeT/TRF by Srinagar Police. […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது. காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக காஷ்மீரில் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த பொருட்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தான் -தஜிகிஜிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய தளபதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் டிஆர்எஃப் […]
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பாக் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர […]
ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது […]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு […]
13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் […]
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி […]
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் புல்வாமா சவுக் பகுதியில் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால் வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்களில் […]
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹ்மத் பல புல்லட் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், பகல் 1.35 மணியளவில், பயங்கரவாதிகள் கன்யார் பகுதியில் உள்ள போலீஸ் நாகா பார்ட்டி மீது துப்பாக்கிச் சூடு […]
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் மேகம் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவரை காணவில்லை. ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்கிவாச்சியின் மேல் பகுதியில் மேகம் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய ஐந்து பேரின் குடும்பம் ரஜோரியில் உள்ள கல்சியான் நவ்ஷேராவில் வசித்து வருபவர்கள். இந்த மேக வெடிப்பில் முகமது தாரிக் காரி (8), ஷாஹனாசா பேகம் (30), நாஜியா அக்தர் (14), ஆரிஃப் ஹுசைன் காரி (5) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் சன்போரா அருகே பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் ஒரு பெண் லேசான காயமடைந்தனர். சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது படி, அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சாலை திறப்பு விழாவிற்கு (ஆர்ஓபி) நிறுத்தப்பட்டுள்ள 29 பட்டாலியனின் துருப்புக்களை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் […]
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார். காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி அவர்கள், பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் கிலானியின் உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவுக்கு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கிலானி தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்தார். பின் பிரிவினைவாத சார்பு கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் அமைப்பை நிறுவினார். அதனை தொடர்ந்து, அனைத்துக் […]
பூஞ்ச் மாவட்டத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுகொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர் கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் நடக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இருவரிடமிருந்தும் 2 ஏகே 47 ரக […]
ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக பாதுகாப்பு கருதி அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் அங்கும், இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் […]