சென்னை மாநகரில் தமிழக அரசின் உத்தரவுகளை மீறியும் சீர்மிகு காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும் வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவரது வேண்டுகோளால் மனம் நெகிழ்ந்த வாகன ஓட்டிகளில் ஒருவர், அவரது காலில் விழுந்தார். நெகிழ்ச்சியான் இந்த நிகழ்வு அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்தது. கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. […]