தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று பிற்பகல் 2 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு மூன்று மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும், கடந்த 18ம் தேதி […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை ஆணையம் என மத்திய அரசு தெரிவித்து, அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பின்னர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான அரசாணையையும் சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான மாநில உறுப்பினர்களை மாநில அரசு தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு […]