காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவிரி தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தான் கிடைக்கப் பெற்றது, நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமா என்பதை உறுதியாக கூற இயலாது அமைச்சரவை கூட்டத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு பரிந்துரையை அனுப்ப வேண்டும் என்ற விதி உள்ளது