சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 23 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இவர்களுக்கு அதிகாரிகள் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..! மேலும், குட்கா விற்பனை […]
மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நான் கருத்துக்களை சொல்கிறேன் என அண்ணாமலை பேட்டி. கோவையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. கோவை மாநகர காவல் துறையினர் […]
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தல். பொதுவாக காவல்துறை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் […]
சென்னை:சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு. சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டது தொடர்பாக,பெண் காவல் ஆய்வாளர் நஜீமா உட்பட 9 காவலர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி மாணவர் அப்துல்ரஹீம் முகக்கவசம் அணியாமல் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த கொடுங்கையூர் போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவரை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு அழைத்து […]
காவலர்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவலர்களின் ஊதியத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. […]
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அபகுதியில் வசிக்கும் 21 காவலர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பகுதியை சேர்ந்த 21 காவலர்களும் பணிக்கு வர வேண்டாம் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.