சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இந்த நாய் கடித்த 28 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பலரையும் விரட்டி விரட்டி கடித்து வைத்த அந்த தெரு நாய் அப்பகுதியினரால் அடித்துக்கொல்லப்பட்டது. இதனையடுத்து, அந்த நாயை மருத்துவர்கள் […]
கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி. டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.