இந்தியாவில் ஆண்டுக்கு 2.18 மில்லியன் இறப்புகளுக்கு வெளிப்புற காற்று மாசுபாடு காரணமாகிறது என BMJ-இல் வெளியிடப்பட்ட ஒரு மாதிரி ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்து இந்தியா உள்ளது. சுவாசிக்கும் காற்று, குடிக்கும் குடிநீர் உள்ளிட்டவை மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய அத்தியாவசியமான காரணிகளாகும். ஆனால், மோசமான காற்று மாசை எற்படுத்தும் விதமாக நிலக்கரி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய நினைப்பதும், போக்குவரத்து […]
ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் […]
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து டெல்லி அரசாங்கம் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை திறக்க இன்று முதல் மீண்டும் தடை விதித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்ததால், ஒரு வாரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மேம்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்பு, டெல்லியில் […]
டெல்லி:காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு மிக அதிக அளவில் இருந்தது. காற்றின் தரக்குறியீடு 382 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மக்களின் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் வாகனங்கள் செல்வதற்கும், கட்டுமான பணிகள் […]
டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு […]
டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி […]