கொல்கத்தாவில் கார் விபத்துக்குள்ளானதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக கொல்கத்தாவுக்கு திரும்பி கொண்டிருந்தபோது திடீரென காரில் பிரேக் போட்டதில் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி சென்ற கார் விபத்தில் சிக்கியது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் செல்லும் வழியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது காரில் முஃப்தி மற்றும் அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மெஹ்பூபா முப்தி காயமின்றி தப்பினார். ஆனால், ஓட்டுநர் காலில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். முப்தியின் கார் பொதுமக்கள் கார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த […]
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது. கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் ஒன்று தவறுதலாக ராதாகிருஷ்ணனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அவரது காரின் முன் பக்கம் சேதம் அடைந்தது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் காவலர் மற்றும் அவரது மனைவி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்துள்ள இரண்டு பேர் சிந்துகி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அவரது மனைவி […]
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை மருத்துவரால் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை” என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்,என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .ரஷ்யாவிடம் இருந்து […]
கட்டுப்பாட்டை இழந்து 120 அடி கிணற்றுக்குள் கார் வேகமாக பாய்ந்த நிலையில், காரில் பயணித்த 3 மாணவர்கள் உயிரிழப்பு. கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவருக்கு வயது 18. கல்லூரியில் பயின்று வரும் இவர், கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து தனது உறவினர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிப்ரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் இரவு […]
இனி கார்களில் அமர்ந்து செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுறுத்தல். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி ஞாயிற்று கிழமை(செப் 4) அன்று கார் விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மிஸ்ட்ரி மற்றும் அவரது நண்பர் இருவரும் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்ட பிறகு அரசு இனி […]
இன்று அதிகாலை தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஜுவாரி ஆற்றில் விளையாட்டு பயன்பாட்டு வாகனம் (SUV) விழுந்ததில் நான்கு பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெற்கு கோவாவில் உள்ள லௌடோலிம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆண், அவரது மனைவி, சகோதரர் மற்றும் அவர்களது நண்பர் மாநிலத் தலைநகர் பனாஜிக்கு சென்று கொண்டிருந்தார்கள் என்றும் இந்த எஸ்யூவி அதிவேகமாகச் சென்றதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல […]
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்தில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஆரம்பத் தகவலின்படி,நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு ஆண்ட்ரூ சென்று கொண்டிருந்த கார் ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து,ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மறைவுக்கு […]
கொலம்பியாவின் முன்னாள் ஜாம்பவான் ஃப்ரெடி ரின்கான் கார் விபத்தில் காலமானார். கொலம்பியாவின் முன்னாள் ஜாம்பவான் ஃப்ரெடி ரின்கான். இவருக்கு வயது 55. இவர் தனது காரில் சென்ற போது எதிரில் வந்த பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1990, 1994, மற்றும் 1998 நடந்த மூன்று உலகக் […]
மகாராஷ்டிரா:வரதா அருகே பாலத்திலிருந்து கார் கீழே விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம்,செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஏழு இளைஞர்களும் சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,அவர்கள் பயணித்த வாகனம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.முதற்கட்ட […]
குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார். மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள […]
ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் திமுக எம்.எல்.ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் (24) சென்ற ஆடி கார் பெங்களூரு அருகே விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நள்ளிரவில் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்,பெங்களூரு கோரமங்கலா அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில் […]
புனேவில் கார் – லாரி மோதி கொண்டதில் 9 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து சோலாப்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 இளைஞர்கள் கடாம்வாக் வஸ்தி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. அதில் காரில் வந்த 9 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக […]
கார் விபத்தில் திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.தற்போது திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக இருந்து வந்தார்.இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.சுந்தரவேல் அவரது மனைவியுடன் மருத்துவர் ஒருவரை பார்க்க சென்னை சென்று கொண்டிருந்தார்.காரை வீரமணி என்பவர் ஓட்டினார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத […]