திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றபடுகிறது. மகா தீபம் என்றழைக்கப்படும் ஜோதியாக எழுந்தருளும் சிவபெருமான் காட்சி தரும் இந்த அற்புதமான நிகழ்வானது வருடம் தோறும் கார்த்திகை மாதம் நடைபெறுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை நாம் காண நமக்கு வாய்ப்பளித்தவர்கள் திருமால், பிரம்மதேவர்.ஆம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி நிலவியதாவும் இந்த போட்டியில் தலையிட்ட சிவபெருமான் தன் அடிமுடியை யார் காண்கின்றாரோ அவரே பெரியவர் என்ற புராண வரலாறு கூறுகிறது. […]
திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானத்தில் மாடவீதியில் பவனி வர பக்தர்கள் பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் பெற்றனர்.இந்நிலையில் இரவு 10 மணியளவில் வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது. கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், […]