குளிர்பானத்தில் விஷம் கொடுத்து காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவத்தின் பெயரில் கொலை வழக்கின் கீழ் இன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் காரைக்கால் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கொலையாளியாக குற்றம் சுமத்தப்பட்ட சகாயராணி கொடுத்த குளிர்பானத்தில் உள்ள விஷமும், அதே போல மாணவன் உடற்கூராய்வில் உடலில் இருந்த விஷமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, […]
விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான். இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு […]
பள்ளி மாணவன் விஷம் கொடுத்த கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக மாணவியின் தாய் சகாயராணி வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுத்துவிட கூடாது என்பதற்காக மாணயின் தாய், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த அந்த சம்பவம் தான். புதுசேரி, காரைக்காலில் தனியார் பள்ளியில் படிக்கும் பாலமணிகண்டன் எனும் மாணவனை தான் […]
பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை கொட்டடிதீர்த்து வருகிறது. இன்று கூட நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தற்போது, வங்க கடலில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாம். ஆதலால், பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் […]
காரைக்காலில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதில்,100-க்கும் மேற்பட்டோருக்கு காலரா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம்,காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.இதனால்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” அரசு அறிவித்தது.மேலும்,பொதுஇடங்களில் அதிக பேர் ஒன்று […]
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள […]
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ குழு ஆய்வு […]
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக,ஏற்கனவே நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,1-9 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை (17-03-2022) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. புதுச்சேரி : புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காரைக்காலில் கடந்த இரண்டு நாட்கள்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.