சோமாலியா தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 12 பேர் இறந்ததாகவும் ,20 பேர் காயமுற்றுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியாவின் தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு கார் குண்டுகள் வெடித்துள்ளது.இரண்டாவது குண்டுவெடிப்பு ஒரு பரபரப்பான உணவகத்தின் முன் நிகழ்ந்துள்ளது. ஆமின் ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குனர், பல காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை சேகரித்ததாக கூறினார். […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள திரிகுட் பஹார் எனும் இடத்தில் உள்ள கேபிள் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கேபிள் கார்களில் குறைந்தது 16 மணி நேரத்திற்கு 48 பேர் தொங்கியபடியே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படை மற்றும் NDRF குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நாற்பத்தி எட்டு பேரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம நவமி தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பின்னர்,பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,ராம நவமி தினத்தை முன்னிட்டு அசைவ உணவுகளை சாப்பிட கூடாது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய இரு தரப்பிலும் […]
சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் , ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரித்து வருகிறது. மேலும், ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான […]