தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களையும், சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி. ராஜேந்திரன், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இருதரப்பிடமும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி […]