அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவுத் துறை அமைச்சராக இருந்த போது, பொருட்கள் கொள்முதலில், ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்டத்தில் […]
அதிமுக தண்ணீரில் மூழ்காத பந்து போன்றது. எவ்வளவு அழுத்தத்தினாலும் மேலே வரத்தான் செய்யும் என ஜெயக்குமார் பேட்டி. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், வருமான முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில்,அவரது நண்பர்கள், உறவினர்கள்,ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் காமராஜ் […]
வேலூர் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடையிலுள்ள அரிசியை பதுக்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் அருகே உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் கலையரசி அரிசியை பொதுமக்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கலையரசியின் வீட்டில் ஆய்வு செய்த மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி முறையாக அரிசி வழங்காமல் 10 மூட்டை அரிசியை பக்கத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் கடை […]