மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
காந்தியடிகளை பாராட்டுகிறார்கள்! அவரை படுகொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சாவர்க்கரையும் பாராட்டுகிறார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். காந்தியை நாம் மறவாமல் […]