மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர் […]
சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார். பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் […]
இன்று ஜவுளித்துறை கருத்தரங்கு நடைபெற்றது. அதில், முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டார். மத்திய அரசின் ஜவுளி துறை மற்றும் தமிழக அரசின் ஜவுளி துறை இணைந்து இன்று சென்னையில் தொழில் முனைவோர் கருதரங்கு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அதில் பேசுகையில், ஜவுளி நகரம் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். […]
மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது என சீமான் பேட்டி. சி.பா.ஆதித்தனாரில் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியப் பின் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், காந்தி பொதுவானவர் என்றால் ஆர்எஸ்எஸ் சாவர்க்கரை எதற்கு கொண்டாடுகிறது. இந்தியாவின் அடையாளம் காந்தியும், அம்பேத்கரும் தான்; காந்தியை சுட்டதற்கு தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ்-ஐ தடையிலிருந்து நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு சிலை […]