தமிழக சட்ட பேரவையில் என்பிஆர் கணக்கெடுப்பில் உள்ள புதிய நடைமுறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தார். இதை தொடர்ந்து வெளிநடப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசும் போது, 50க்கும் மேற்பட்ட இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. தமிழக அரசு கோரிக்கை நிராகரித்ததை […]