ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்குதலால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டம் காட்டு பகுதியிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இந்த யானைகள் தோட்ட பயிர்களை நாசம் செய்தன. மேலும் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களையும் யானைகள் விரட்டின. இதனால் கிராம மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் தோட்ட தொழிலாளர்களும் வீட்டை விட்டு வெளியே வர இயலாமல் முடங்கினர். […]