காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. செய்யாற்றில் வெங்கச்சேரி பகுதியில் ஏற்கெனவே ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் நிலையில் பாலாற்றில் 2 இடங்களில் ரூ.78 கோடியில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. வேகவதி ஆறு கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்ட நிலை யில் பாலாறும், செய்யாறும் […]