இந்தியாவில் காசநோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் வகையில், இக்கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கும் திட்டத்தை நரேந்திர மோடி அரசாங்கம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்காலிகமாக பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் அபியான் (பிஎம்டிபிஎம்பி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் காசநோயாளிகளின் உணவுத் தேவைகளுக்கு, அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), தனியார் துறை கார்ப்பரேட்டுகள் அல்லது தனிநபர்களின் நிதி பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும். . இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை […]
காசநோய் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் இது மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் மைக்கோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். இந்த பாக்டீரியம் நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த டி.பியை […]