இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். […]
கடந்த 17-ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம். கடந்த 17-ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் […]
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும். வரும் 8ஆம் தேதிக்குள் இவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றால் மற்றொருவர் போட்டியின்றி காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என நேரு குடும்பத்திற்கு மிகவும் […]
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் அகில இந்திய […]
இன்று டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னரே […]
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக கட்சிக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி அம்ரீந்தார் சிங்கிடம் இருந்து பறிக்கப்பட்டு நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் காங்கிரஸ் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவி வகித்தவர். தற்போது இவர் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முகுல் வாஸ்னிக் தனது அறுபதாவது வயதில் தனது நீண்ட நாள் தோழியான ரவீனா குரானாவை மணந்துள்ளார். ரவீனா ஒரு தொழிலதிபர் என்பதும், இவருக்கும் அறுபது வயது என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் […]
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் சந்தாராம் நாயக். ராகுல் காந்தி அரசியலில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இவர் தனது மாநிலத் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் மார்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சந்தாராம் நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரடிமா கவுண்டிகோ தெரிவித்துள்ளார். 72 வயதான இவர் ஒரு […]