ஒரு கட்சி தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. அவர் நிர்வாகிகளிடம் கெஞ்சவும் செய்யலாம், கொஞ்சவும் செய்யலாம், மிஞ்சவும் செய்யலாம் அது தலைவரின் விருப்பம் என காங்கிரஸ் எம்பி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு இன்று தனது பாராளுமன்ற தொகுதியான திருச்சியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அவர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த […]