பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினர், விசாரணை நடத்தி சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் தொடர்புள்ள நவீன் குமாரை கைது செய்தனர். மேலும், எழுத்தாளர் பகவான் கொலை வழக்கில் தொடர்பு கொண்டு கைதாகி உள்ள மராட்டியத்தைச் […]