கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிக்கு பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டைக்கு அருகே உள்ள உ.செல்லூர் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததது. இதனை அடுத்து, உ.செல்லூர் அரசு தொடக்க பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் தொடக்கப்பள்ளிக்கு போட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு காவல்துறை […]
டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம். – உயர்நீதிமன்றம் அனுமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளிக்கூட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது. பள்ளி பெருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை அடுத்து தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் […]
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் காவல்துறையினர் விரைவான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபு அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் […]
உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் செல்போனை சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவியின் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, 2 அறிக்கைகள் நீதீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சிபிசிஐடி போலீசார் தரப்பு மற்றும் சிறப்பு […]
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை அடுத்து இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அதனை அடுத்து ஜூலை 17ஆம் தேதியில் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சுமார் 410 பேர் கைது […]
கல்விநிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்கள் தேவை இருப்பின் மட்டும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும். மற்றபடி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி காவல் நிலைய அதிகாரிகளே விசாரிக்கலாம். – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு. கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பில் உண்மை தன்மை ஆராய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் இயற்கைக்கு மாறாக […]
கள்ளக்குறிச்சி:இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை என்றும்,இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் […]
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். […]
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில்ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட […]