ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பட்ட படிப்பு: தாணிக்கண்டி,முள்ளாங்காடு,பட்டியார் கோவில்பதி,மடக்காடு, மத்வராயபுரம்,ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் […]
பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரிகள் உட்பட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 2011 – 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி.,எஸ்.டி. உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னதாக வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில்,பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரிகள் உட்பட 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச […]
கிராமப்புறங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச […]
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் பயன்பெறும் […]
முதல் பட்டதாரி என்பதற்குப் பதிலாக ” முதல் தலைமுறை பட்டதாரி” என்று நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என்றும் இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ரூ.5 […]