தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்புவது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும் என்றும்,இது தொடர்பாக புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது என்றும், […]