ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பதிலுரை அளிக்கவுள்ள நிலையில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு. நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்றும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம்,முதலமைச்சர் பதிலுரை நேரலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனைத் […]
சென்னை:நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.5ஆம் தேதி) ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 5 ஆம் தேதிநடைபெறும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்தது. இதனையடுத்து,கடந்த […]