கலைஞர் நூலகத்தின் கட்டுமானப்பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல். மதுரையில் ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகம் ஏழு மாடிகள் கொண்ட நூலகமாக, 2 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் இடம் பெறும் வண்ணம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகவும், பிப்ரவரி மாதம் உலகத்தை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்க திட்டம் என அமைச்சர் எ.வ. வேலு தகவல். மதுரை – நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டிடம் கட்டுமான பணிகளை பொதுபணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று […]
மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை முதல்வர் நேரடியாக சென்று பார்வையிட்டார். 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது. பின்னர், இந்த நுலக கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க […]
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.114 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து, மதுரையின் நூலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மதுரையில் சர்வதேச அளவில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நூலகம் அமைக்க 99 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள், நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் […]