அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, […]
கலிபோர்னியாவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலி மற்றும் 11 பேர் காயமடைந்தனர். வடக்கு கலிபோர்னியாவில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி முழுதும் மின்சாரம் தடைபட்டுள்ளது, இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். […]
செவ்வாய் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்,நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேட்டர் எனப்படும் பகுதியில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அதன்பின்னர்,பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் […]
கடலுக்குள் விழுந்து சுறாவிடம் மாட்டிக்கொண்ட நபர்.உயிர்தப்பிய சம்பவம். அமெரிக்கா கடலோர படை வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையோரத்தில் கடந்த சனிக்கிழமை பெரிய வெள்ளை சுறாவால் கடிபட்ட ஆதம் கூன்ஸ் என்ற நபரை அமெரிக்க கடலோர காவல்படை காப்பாற்றியுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட நபரான ஆதம் கூன்ஸ் இந்நிகழ்வினை கிறிஸ்மஸ் மிராக்கிள் என்றே குறிப்பிடுகிறார்.அமெரிக்க கடலோர காவல்படை மதியம் 3.15 மணியளவில் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த நபரை சுறாமீன் கடித்ததாக கூறியுள்ளனர். பின்னர் இது குறித்து […]