குமாரசாமி பதவியேற்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என அறிவிப்பு. வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.இதேபோல் 15 […]
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி வருகிற 23-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது மகன் குமாரசாமி முதல்-மந்திரியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதச்சார்பற்ற தன்மையுள்ள ஒரு ஆட்சியை உருவாக்க முடிந்தது எனக்கு நிம்மதியை தருகிறது. வகுப்பு வாத கட்சியை தடுத்து நிறுத்தக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று இருந்தது திருப்தி […]
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாமல் 104 எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் எடியூரப்பா அரசை 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே எடியூரப்பா […]
கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈகிள்டன் விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இவர் தற்போது கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பரமேஸ்வரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்… மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…
எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த […]