அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு […]
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில்,இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென […]