கர்நாடகாவில் லஞ்சம் கொடுக்க பாஜக பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்எல்எ ஷிவராம் ஹெப்பர் தெரிவித்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த சமயத்தில் பாஜக தலைவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக கூறி, அது தொடர்பான சில ஆடியோக்களை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் யெல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் மனைவியிடம், பாஜகவை சேர்ந்தவர் 15 […]