ஜனநாயகம் வென்றது! காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணியை வாழ்த்துகிறோம் ! என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எடியூரப்பாவின் ராஜினாமா குறித்து கூறியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: ’’கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையில் ஆளுநரின் துணையோடு சட்டவிரோத முறையில் ஆட்சிக்கு வர முயன்ற பாஜகவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கு கோராமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றிப் பெற்றிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியோடு […]