விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் வருகிற 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுமென கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய அவர், காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை பெற்று தாம் தவறு செய்து விட்டதாக அவர் கூறினார். விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தும் என்ற அவர், […]