கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்ற பாஜகவின் எடியூரப்பா இன்று பெரும்பான்மை நிரூபிக்காமலே பதவி விலகினார். இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறியதாவது: “ தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதேநேரத்தில், மதச்சார்பற்ற அணியாக காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி […]