மிகவும் பிரபலமான கொரிய பாப் இசைக்குழுவான BTSக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். கொரிய நாட்டையும் தாண்டி அவர்களுக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில், பிடிஎஸ் இசைக்குழு மீது அதிகம் ஆர்வம் கொண்ட மூன்று மாணவிகள் அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்கள். கரூரில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மூன்று பேர் 14,000 எடுத்துக்கொண்டு பிடிஎஸ் இசைக்குழுவை பார்க்க கொரியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் விடுதிரும்பவில்லை என்ற […]
கரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]
கரூர் மாவட்ட கவுன்சிலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். கடந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் புதியதாக விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அண்மையில், கரூரில், கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 36வது வார்டு கவுன்சிலர் வசுமதி, கரூர் மாநகராட்சியில் ஒரு தெருவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க தீர்மானம் […]
கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திருவிக என்பவரை அழைத்துக்கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் முன்னாள் அமைச்சர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், […]
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர். இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை […]
கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]
கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ […]
திமுகவில் சேரவில்லையென்றால் அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் போடுவதாக கூறி, ஓபிஎஸ்,ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் திமுக-வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருவதாகவும்,அரசியல் ரீதியாக அதிமுகவை சந்திக்க முடியாத திராணியற்ற திமுக-வை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் […]
தமிழகம்:மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் என்பவர்,நேற்று காலை 9-30 மணிக்கு கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது,அந்த வாகனம் கனகராஜ் அவர்கள் மீது மோதிவிட்டு […]
வாகன சோதனையின் போது வேன் மோதி போக்குவரத்து அதிகாரி மரணம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணியாற்றி வருகிறார். அவர் இன்று காலை ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வேன் நிற்காமல், அவர் மீது மோதி விட்டு உடனடியாக சென்று விதத்தில். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட […]
கரூர்:பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக,அவர் படித்த தனியார் பள்ளியின் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அக்கடிதத்தில்,”பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்ல பயமாக உள்ளது’,என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து,கரூர் பள்ளி மாணவி உயிரிழந்த […]
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் ‘1098’ என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சமீபத்தில் கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த, போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
கரூரில் பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை. கரூர் : கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட […]
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உடன் கலந்து பங்கேற்றனர். இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி டெல்டா பகுதிகள் […]
கரூர் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகள் முத்தரசி ஆவார்.இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.இவரது சகோதரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருகிறார். இதனால் அவரை பார்க்க அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அவருக்கு அங்குள்ள பரத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முத்தரசி மாயமாகியுள்ளார். இதன் காரணமாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி ஆவார்.இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது தோட்டத்தில் இருந்து பூக்களை பறித்துவிட்டு அதை ஸ்ரீரங்கம் சந்தையில் விற்பனை செய்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது அவர் கீலமேடு பகுதியில் வந்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதன் காரணமாக நல்லதம்பி சம்பவ இடத்திலேயே […]
கரூர் மாவட்டத்தில் கீழத்தலையூரில் உள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் ஆவார்.இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் மரணமடைந்துள்ளார். இவரது மனைவி விஜயா ஆவார்.இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.இவரது ஒரு மக்கள் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவர்களது வீட்டிற்கு அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கு சில நாட்களாக உடல்நிலை […]
கரூர் அருகேயுள்ள புலியூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறோம். இந்நிலையில் எங்கள் ஊரில் திருச்சி மெயின் ரோட்டில் தனியார் சிமெண்டு ஆலை எதிரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது. மேலும் இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இங்கு மது அருந்துபவர்கள் வயல்வெளிகளில் கண்ணாடி […]
நேற்று இரவு முதல் விடிய விடிய கரூர் அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த தாளவாய்புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த கோழிப்பண்ணைக்கு நேற்று நள்ளிரவு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு மற்றும் முறையாக ஆவணங்களைப் பராமரிக்காததது ஆகிய புகார்களின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் […]