தமிழகத்தில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும்,இந்த அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று 8 மாதங்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு,ஆட்சிக்கு வந்தபின் ரூ.2900 என்ற அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்! திமுகவிற்கு தனது கடும் கண்டனங்கள் என்றும்,முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் […]
ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள இடைத்தரகர்கள் மறுப்பதும்,மற்றொருபுறம் விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பைக் கூட அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாதது ஆகியவை தான் கரும்பு உழவர்களின் கண்ணீருக்கு காரணமாகும் என்று கூறி,இவர்களின் கண்ணீரை தமிழக அரசு துடைக்குமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில்,இதுவரை உழவர்களிடமிருந்து ஒரு கரும்பு கூட நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை.அதற்கு காரணம் அதிகார வர்க்கமும், இடைத்தரகர்களும் தீட்டி […]
சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார். சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் […]
விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல் செய்வதற்கான முக்கிய விதிகளை வெளியிட்டது கூட்டுறவுத்துறை. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு […]
கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 என்று கணக்கிட்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் […]
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அவர் தாக்கல் செய்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக […]