Election2024 : கரும்பு விவசாயி சின்னம் எப்படி சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அதே பன்னீர்செல்வம் எனும் பெயர் கொண்ட 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் அனைவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் […]