மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதன்படி கரும்பு குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். இதனால் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு […]
எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் […]
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள். பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்க்ளுக்கு […]
பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற இலவச பொருட்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன் என சீமான் பேட்டி. சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வளசரவாக்கத்தில் உள்ள கக்கன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற இலவச பொருட்கள் வழங்குவதை தேசிய இன அவமானமாக கருதுகிறேன். பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தரவேண்டும் என கூறுவதை […]
ஜார்கண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 6-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் […]
சென்னை:குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய 2022-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தும்,பொங்கல் சிறப்பு தொகுப்பபில் கரும்பை இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் 20 பொருட்கள் […]
பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தொகுப்பில் முழு கரும்பு இடம் பெறும். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தனர். […]
ஒரு குவிண்டால் கரும்புக்கான ஊதிய விலையை ரூபாய் 290 அதிகரிக்க என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2019-2020 வணிக ஆண்டிற்கான கரும்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 275 ரூபாயாக இருந்தது.இதனையடுத்து,ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு முதல் நியாயமான & ஊதிய விலை ரூபாய் 10 அதிகரித்தது,ரூ.285 ரூபாய் என்ற கணக்கில் உள்ளது. இந்நிலையில்,கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கான நியாயமான மற்றும் ஊதிய விலையை ரூ.5 அதிகரித்து ரூ. […]