சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே, சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் இன்று நேரில் […]
இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் எதிரொலியால் இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், மருத்துவத்துறை கூடுதல் செயலாளர் தலைவராகவும், குடும்பநலத்துறை இயக்குனர் துணை தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் அமைப்பை சேர்ந்த […]
கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் […]
சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை […]
சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கவால்துறையினர் சிறுமியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலியை கைது செய்தனர். கருமுட்டை விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் […]