உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், காணொளி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் உள்ள அரசன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. கருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்குவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பிய நிலையில், அந்நாட்டிற்குள் நுழைந்து ரஷ்யா 7 வது நாளாக உக்கிரமாக தாக்கி வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன.ஆனால்,ரஷ்யாவுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில்,உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்குவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் என்று கூறப்படுகிறது.ஏனெனில், ரஷ்யாவில் உள்ள பல துறைமுகங்கள் […]