திருப்பூரில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில், இந்து முன்னணியினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கோல்டன் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடிகம்பம் இருந்த இடத்தில் இந்து முன்னணியினர் கொடியேற்ற முயல்வதாக புகார் எழுந்தது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடியேற்றுவதை தடுக்க முயன்ற போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்