2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக அமைய உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவில் இணைவது குறித்து கமல்நாத்துடமிருந்தோ அல்லது நகுல்நாத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. பாஜக செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா, தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் முதல்வர் […]
காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தை காங்கிரஸ் கட்சி நியமித்தது உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் சிவசேனா கட்சியில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் கட்சியின் […]
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் எனவே சட்டப்பேரவை கூட்டி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜரான […]
மத்திய பிரதேசத்தில் இன்றைக்குள் முதலமைச்சர் கமல்நாத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்து கிளம்பிய பனிப்போர் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் திடீரென்று ராஜினாமா செய்ததை அடுத்து ஆளும் கமல்நாத் ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படவே அந்த மாநில ஆளுநர் லால்ஜி டான்டன், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று […]
மத்தியப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியின்ன் ஆட்சிக்கு கடும் நெடுக்கடி நிலவி வரும் நிலையில் காங்.,எம்எல்ஏ ஒருவா் ராஜிநாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அங்கு அரசியல் நெடுக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது பகீரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் சிலரை பணம் கொடுத்து தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முயற்சி செய்து […]