மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவின் முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவின் 5ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவையொட்டி காலை […]