குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது, படகு கவிழ்ந்ததில் கன்னியாகுமரி மீனவர்கள் 2 பேர் மாயமாகியுள்ளனர். பூதுரை மீனவ கிராமத்தை சேர்ந்த 6 பேர், குஜராத் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடந்த 3 ஆம் தேதி அங்கு சென்றனர். மீன்பிடித்துவிட்டு விசைப்படகில் கடந்த 15 ஆம் தேதி திரும்பிய இவர்களது படகு, இன்று காலை கர்நாடகாவில் உள்ள கார்வார் துறைமுகம் அருகே சூறைக்காற்றில் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த 4 மீனவர்களை அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்டனர். புஷ்பராஜ், அருள்ராஜ் […]