கனிமொழி எம்.பி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் கனிமொழி எம்.பி அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘அனைவருக்கும் என்னுடைய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கல் திருவிழா என்பதையே விவசாயிகளை உழவை கொண்டாடக்கூடிய ஒரு திருவிழாவாக தான் நாம் வழிவழியாக போற்றிக் கொண்டாடி கொண்டிருக்கிறோம். […]
இன்று என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கனிமொழி எம்.பி ட்வீட். நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி அவர்கள் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், திமுகவின் முக்கிய பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்த நாளான இன்று கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்,’இன்று என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! கொரோனா நோயின் பரவல் அதிகமாகி வருவதைக் […]
பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது என கனிமொழி ட்வீட். கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இந்த நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடத்தில் என்று சொன்ன இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஅவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினம். இந்நாளில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் ஒழித்து அவர்களுக்குப் […]
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் ட்வீட். இன்று நாடுமுழுவதும் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில்,உலக சுற்றுலா தினமான இன்று,நம் சுற்றுலா தளங்களை பாதுகாப்பாக வைப்பதோடு,சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். […]